News July 8, 2024
இஷான் கிஷன் – பிசிசிஐ மோதல் (1)

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடரின்போது இந்திய வீரர் இஷான் கிஷன் உடல் நிலை சரியில்லை என்று கூறி நாடு திரும்பினார். அணியின் விளையாட இடம் கிடைக்காது என்று தெரிந்ததால், அவர் இப்படி செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின், அவர் பார்ட்டிகளில் பங்கேற்பதை பார்த்த பிசிசிஐ, அவர ரஞ்சி கோப்பை விளையாட சொன்னது. அதையும் பொருட்படுத்தாமல் கிஷன், ஐபிஎல் பயிற்சி ஆட்டங்களில் விளையாடச் சென்றார்.
Similar News
News September 24, 2025
BREAKING: அமைச்சர் ஹாஸ்பிடலில் அனுமதி

அமைச்சர் ஐ.பெரியசாமி கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவைக்கு கட்சி பணிக்காக சென்றபோது, அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் வயிற்று வலி காரணமாக, மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News September 24, 2025
இத செஞ்சா நோபல் பெறலாம்: டிரம்ப்புக்கு மேக்ரான் ஐடியா

காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவந்தால் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கூடிய ஒரே ஆளாக டிரம்ப் மட்டுமே உள்ளதாகவும், இஸ்ரேல் அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கப்போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News September 24, 2025
இனி சாக்லேட் பாய் கேரக்டர் வேண்டாம்: சாந்தனு

விஜய் சேதுபதி, SK, மணிகண்டன் போன்று சினிமாவில் அடிமட்டத்தில் இருந்து ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ள தொடங்கி இருப்பதாக சாந்தனு தெரிவித்துள்ளார். சாக்லேட் பாய் கதாபாத்திரம் வேண்டாம் என்பதில் தீர்க்கமாக இருப்பதால், சாமானிய மக்களுக்கு தன்னை பிடிக்கும் நோக்கில் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்கிறேன் என்றார். மேலும், தான் இனி சாந்தனு பாக்கியராஜ் இல்லை; வெறும் சாந்தனு மட்டும்தான் எனவும் கூறியுள்ளார்.