News July 8, 2024
பல் ஈறுகளில் ரத்தம் கசிகிறதா?

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், ரத்தம் உறைவதைத் தவிர்க்கும் மாத்திரைகளை உட்கொள்வோருக்கு பல் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இப்பிரச்னையை வெதுவெதுப்பான உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளிப்பதாலும், சர்க்கரை மற்றும் பற்களில் ஒட்டும் தன்மையுடைய உணவுகளைக் குறைத்து, ‘வைட்டமின் கே, சி’ அதிகம் உள்ள கீரைகள், பழங்களை சாப்பிடுவதாலும் தவிர்க்கலாமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Similar News
News September 24, 2025
இத செஞ்சா நோபல் பெறலாம்: டிரம்ப்புக்கு மேக்ரான் ஐடியா

காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவந்தால் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கூடிய ஒரே ஆளாக டிரம்ப் மட்டுமே உள்ளதாகவும், இஸ்ரேல் அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கப்போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News September 24, 2025
இனி சாக்லேட் பாய் கேரக்டர் வேண்டாம்: சாந்தனு

விஜய் சேதுபதி, SK, மணிகண்டன் போன்று சினிமாவில் அடிமட்டத்தில் இருந்து ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ள தொடங்கி இருப்பதாக சாந்தனு தெரிவித்துள்ளார். சாக்லேட் பாய் கதாபாத்திரம் வேண்டாம் என்பதில் தீர்க்கமாக இருப்பதால், சாமானிய மக்களுக்கு தன்னை பிடிக்கும் நோக்கில் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்கிறேன் என்றார். மேலும், தான் இனி சாந்தனு பாக்கியராஜ் இல்லை; வெறும் சாந்தனு மட்டும்தான் எனவும் கூறியுள்ளார்.
News September 24, 2025
RECIPE: சுவையான கம்பு புட்டு!

➥கம்பை மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும் ➥இதை ஆறவைத்து, மிக்ஸியில் கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும் ➥அதில் ½ டம்ளர் வெந்நீரை ஊற்றி உதிரி உதிரியாக பிசையவும் ➥இந்த கம்பு மாவை 10 நிமிடம் மிதமான தீயில் வேகவைத்து எடுக்கவும் ➥வேகவைத்த மாவில், கருப்பட்டி வெல்லம், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய் தூள் சேர்த்தால், சுவையான கம்பு புட்டு ரெடி. இப்பதிவை நண்பர்களுக்கு பகிரவும்.