News July 8, 2024
பிரம்மாண்ட இயக்குநரின் ஆவணப்படம்!

மகதீரா, பாகுபலி, RRR போன்ற பிரம்மாண்ட படைப்புகளை இந்திய திரையுலகிற்கு கொடுத்தவர் இயக்குநர் ராஜமெளலி. அவரைப் பற்றிய பயோபிக் ஆவண வடிவில் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ‘மார்டன் மாஸ்டர்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் அவர் இயக்கிய படங்களில் நடித்த நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் அவரைப் பற்றி பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.
Similar News
News September 24, 2025
டீ, காபிக்கு பதிலா இத குடிங்க! அவ்வளவு நன்மை

டீ அல்லது காபிக்கு பதிலாக காலையில் திராட்சை ஜூஸ் குடிங்க. இதில் உள்ள வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், Iron ஆகியவை உடலுக்கு மிகவும் நல்லதாம் ➤வெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ➤செரிமானம் மேம்படும் ➤இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் ➤எடையை கட்டுப்படுத்த உதவும் ➤தசைகள், எலும்புகள் வலுவாகும். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 24, 2025
ரஷ்யா ஒரு அட்டக்கத்தி: டிரம்ப்

நேட்டோ நாடுகளின் துணையுடன் ரஷ்யாவிடம் தான் இழந்த பகுதிகளை உக்ரைன் திரும்ப பெற வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்தில் முடித்திருக்க வேண்டிய போரை, ரஷ்யா மூன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வருவதாகவும், இது அந்த நாடு ஒரு பேப்பர் புலி என்பதை நிரூபிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். சமீபகாலமாக உக்ரைனுக்கு எதிராக பேசி வந்த டிரம்ப், முதல்முறையாக ஆதரவாக பேசியுள்ளார்.
News September 24, 2025
சற்றுமுன்: மீண்டும் இணைகிறாரா ஓபிஎஸ்?

டிடிவியை தொடர்ந்து, OPS உடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லி சந்திப்பின்போது, OPS-ஐ அதிமுகவில் சேர்க்க முடியாது; ஆனால், NDA கூட்டணியில் சேர்க்கலாம் என EPS கூறியிருந்தார். இதனையடுத்து, டிடிவி, ஓபிஎஸ்ஸை மீண்டும் கூட்டணியில் இணைக்கும் பொறுப்பு அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அவரும், கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.