News July 7, 2024
235 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. முதல் 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்து திணறிய இந்தியா, அடுத்த 10 ஓவரில் 160 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியாவின் ஸ்கோர் 20 ஓவரில் (14 சிக்ஸ், 20 பவுண்டரிகளுடன்) 234/2 ஆக உயர்ந்தது. அபிசேக் சர்மா 100, ருதுராஜ் கெய்க்வாட்77, ரிங்கு சிங் 48 ரன்கள் குவித்தனர்.
Similar News
News September 24, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 24, புரட்டாசி 8 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை:10:30 AM – 12:00 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News September 24, 2025
PhonePe, CRED-ல் இனி இந்த சேவையை பெற முடியாது

PhonePe, CRED போன்ற ஃபின்டெக் செயலிகளை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தும் அம்சம் தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்களின் அடையாளங்கள் முழுமையாக சரிபார்க்கப்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், RBI-ன் புதிய விதி, மேற்கூறிய சேவையை நிறுத்தியுள்ளது. இனி நெட்பேங்கிங், UPI, NEFT மற்றும் காசோலை மூலம் மட்டுமே வாடகை செலுத்த முடியும்.
News September 24, 2025
இரவில் செய்யக்கூடாத விஷயங்கள்

இரவு நேரம் என்பது உடல் புத்துணர்வு ஏற்படும் நேரமாக இருக்க வேண்டும். இதற்கு நல்ல தூக்கம் தேவை. சில சின்ன சின்ன செயல்களை தவிர்ப்பது இரவு எந்த தொந்தரவும் இல்லாமல் தூங்க உதவியாக இருக்கும். எதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.