News July 7, 2024

ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இல்லை: இபிஎஸ்

image

மதுரை விமான நிலையத்தில் இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவிற்கு விசுவாசமாக ஓபிஎஸ் இருந்த வரலாறு கிடையாது. கட்சி பொதுக்குழு எடுத்த முடிவால் அவரை மீண்டும் இணைக்க முடியாது. 1 சதவீதம் கூட அவரை சேர்க்க வாய்ப்பு இல்லை என்றார். 

Similar News

News September 6, 2025

மதுரை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

மதுரை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News September 6, 2025

மதுரை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

மதுரை மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE IT

News September 6, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (05.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!