News July 7, 2024
பாமக பிரமுகரை வெட்டிய 5 பேர் கைது

கடலூரில் பாமக பிரமுகர் சங்கர் வெட்டப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2021ஆம் ஆண்டு சங்கரின் தம்பி பிரபு அதே பகுதியை சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கின் முக்கிய சாட்சியாக சங்கர் இருப்பதால் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட மறுநாளே இச்சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News September 24, 2025
தேசிய விருதுடன் திரையுலக நட்சத்திரங்கள்

71-வது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த நடிகர் – ஷாருக்கான், சிறந்த துணை நடிகர் – எம்.எஸ் பாஸ்கர், சிறந்த துணை நடிகை – ஊர்வசி, சிறந்த இசையமைப்பாளர் – ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதை – ராம்குமார், தாதா சாகேப் பால்கே – மோகன்லால் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நட்சத்திரங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, SWIPE செய்து புகைப்படங்களை தவறாமல் பாருங்க..
News September 23, 2025
சிறுநீர் கழிக்கையில் எரிச்சல்.. காரணம் என்ன?

மனிதர்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு ஏற்படுவதற்கு சிறுநீரில் கிருமித் தொற்று, சிறுநீர் பாதையில் அடைப்பு ஆகியவை காரணமாகும். இதற்கு சிறுநீர் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து வயிற்றில் கல் இருக்கிறதா என அறிய வேண்டும். அதன் பிறகு எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை அல்லது மருந்துகள் எடுத்துக்கொண்டு சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலுக்கு தீர்வு காணலாம்.
News September 23, 2025
தாறுமாறாக மாறிய தங்கம் விலை

வரலாறு காணாத உச்சமாக, தங்கம் விலை கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ₹2,800 உயர்ந்து நடுத்தர மக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. 1920-ல் சவரன் ₹21-க்கு விற்கப்பட்ட தங்கம், இன்று ₹85,120-க்கு விற்பனையாகிறது. இதன்படி, 105 ஆண்டுகளில் 3,97,235% தங்கம் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2021 (₹35,000) முதல் 2025 இன்று வரையிலான (₹85,120) 5 ஆண்டுகளில் மட்டும் 138% தங்கம் விலை உயர்ந்துள்ளது.