News July 7, 2024
அரசியல் கொலைகளை தடுக்க தவறிவிட்டார் ஸ்டாலின்

பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இபிஎஸ் சார்பில் ஜெயக்குமார் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், அதிமுக காலத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டதாகவும், ஆனால் தற்போது அதன் கைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார். உள்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், அரசியல் கொலைகளை தடுக்க தவறிவிட்டதாகவும், திமுக அரசு தூங்கி கொண்டிருப்பதாகவும் அவர் சாடினார்.
Similar News
News September 23, 2025
GST சீர்திருத்தத்தால் தமிழகம் வளர்ச்சியடையும்

GST சீர்திருத்தத்தால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். வரி குறைப்பு காரணமாக பருத்தி, தோல், காலணி, ஆட்டோமொபைல் துறைகள் பயன்பெறுவதால் திருப்பூர், கோவை நகரங்களில் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் சென்னை, ஒசூர் நகரங்களில் ஆட்டோமொபைல் துறை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும், வருமானம் பெருகும் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
News September 23, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கும் ₹5,000.. தமிழக அரசு திட்டம்

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி குறைப்பை அமல்படுத்துவதாக சுதந்திர தின உரையில் மோடி அறிவித்தார். இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று முதல் புதிய ஜிஎஸ்டியும் அமலுக்கு வந்துள்ளது. இந்த பின்னணியில், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை தீபாவளியையொட்டி CM ஸ்டாலின் அறிவிப்பார் என தலைமை செயலக வட்டாரங்களில் தகவல் பகிரப்படுகிறது.
News September 23, 2025
மத்திய அரசில் 7,267 பணியிடங்கள்: Apply பண்ணுங்க

EMRS எனப்படும் மத்திய அரசு பள்ளிகளில் 7,267 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: டிகிரியுடன் B.Ed. வயது வரம்பு: அதிகபட்சமாக 55. சம்பளம்: ஆசிரியரல்லாத பணிகளுக்கு ₹18,000 – ₹1,12,400, ஆசிரியர் பணிகளுக்கு ₹35,400 – ₹2,09,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.23. விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <