News July 7, 2024

32 கோடி சுற்றுலா பயணிகள் வருகை – அமைச்சர்

image

நீலகிரி சுற்றுலா இடங்களுக்கு வரும் உல்லாச பயணிகள் கூட்டம் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. மேலும் பயணிகளை கவரும் வகையில், நீலகிரி சுற்றுலா ஸ்தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கு 32 கோடி உல்லாச பயணிகள் வருகை புரிந்து இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் நேற்று ஊட்டியில் தெரிவித்தார்.

Similar News

News January 11, 2026

உதகை அருகே காட்டெருமை தாக்கி பெண் பலி

image

உதகை அருகே கொதுமுடி கிராமத்தில் காட்டெருமை தாக்கி மலர்க்கொடி (45) என்பவர் உயிரிழந்தார். வேலைக்கு செல்லும்போது தேயிலை தோட்டத்தில் இருந்த காட்டெருமை தாக்கியதில் மலர்கொடி சம்பவ இடத்திலேயே பலியாகினார். தொடர்ந்து இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News January 11, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (10.01.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இதில் உதகை நகரம், ஊரகம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்ட காவல் நிலைய அதிகாரிகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

News January 10, 2026

நீலகிரி: ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி! APPLY NOW

image

நீலகிரி மக்களே, பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!