News July 6, 2024
நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்க எதிர்ப்பு

நீதிபதி அனிதா சுமந்த், ஆம்ஸ்ட்ராங் அடக்கம் தொடர்பான வழக்கை விசாரிக்க, அவரது தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை நாளை விசாரிக்கிறார். ஆனால், வழக்கை அவர் விசாரிக்க கூடாது எனவும், மாநகராட்சி வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி பவானி, இந்த வழக்கை விசாரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 23, 2025
SETC பஸ்களில் இனி குடிநீர் விற்பனை

அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் (SETC) மூலம் சென்னையிலிருந்து கோவை, திருப்பூர், நாகர்கோவில், செங்கோட்டை உள்ளிட்ட தொலைதூர இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணம் செய்யும்போது குடிநீர் பாட்டில் விநியோகம் செய்ய SETC திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக 1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்வதற்கான இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது.
News September 23, 2025
விசித்திரமான இடங்கள்

உலகில் பல விசித்திரமான இடங்கள் உள்ளன. அவை இயற்கை அற்புதங்களாகவும், மனிதனால் உருவாக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. சில இடங்கள் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கின்றன. அவற்றில் சில இடங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று வேறு ஏதேனும் விசித்திரமான இடம் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 23, 2025
BREAKING: ₹85,000-ஐ தாண்டிய தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. காலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ₹70 உயர்ந்து ₹10,500-க்கும், சவரன் ₹560 உயர்ந்து ₹84,000-க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் மீண்டும் சவரனுக்கு ₹1,120 உயர்ந்து ₹85,120-க்கு விற்பனையாகிறது. இதனால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.