News July 6, 2024

5 மாதத்தில் 5 அரசியல்வாதிகள் கொலை

image

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில், அடுத்தடுத்து 5 அரசியல்வாதிகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப். மாதம் வண்டலூரைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன், மே மாதம் நெல்லை காங்., தலைவர் ஜெயக்குமார், ஜான் பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜா கொல்லப்பட்டனர். இதேபோல 3 நாள்களுக்கு முன் சேலத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி சண்முகமும், நேற்று BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ளனர்.

Similar News

News September 23, 2025

மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம்

image

தற்காலத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பு ஏற்படுவதை பார்க்கிறோம். தினம் 2 ரம்புட்டான் பழங்களை சாப்பிடுவது இந்த அபாயத்தை இயற்கையாக குறைக்க உதவும் என்கின்றனர் டாக்டர்கள். இப்பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம் சத்துகள் நிறைந்திருப்பதால், BP-யை கட்டுப்படுத்த உதவும். இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு, மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறதாம். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 23, 2025

என்கிட்டயேவா.. தக் பதில் கொடுத்த மோகன்லால்

image

மோகன்லாலின் கவுண்ட்டர் பதில்களுக்காகவே அவரது நேர்காணலை பலரும் பார்ப்பதுண்டு. அப்படித்தான் தனக்கு அறிவிக்கப்பட்ட ‘தாதா சாகேப் பால்கே’ விருது குறித்தும் கலகல பதிலை அளித்துள்ளார். ஒரு நடிகருக்கான உயரிய விருதே கிடச்சாச்சு, இதுக்கு மேல சாதிக்க ஒன்னுமில்ல, இனி எதுக்கு நடிப்பை தொடருறீங்க என கேட்கப்பட்டது. அதற்கு, ஐயோ அப்டியா, எனக்கு நடிப்ப தவிர எதுவும் தெரியாது, இனி நான் என்ன செய்வேன் என பதிலளித்தார்.

News September 23, 2025

SETC பஸ்களில் இனி குடிநீர் விற்பனை

image

அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் (SETC) மூலம் சென்னையிலிருந்து கோவை, திருப்பூர், நாகர்கோவில், செங்கோட்டை உள்ளிட்ட தொலைதூர இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணம் செய்யும்போது குடிநீர் பாட்டில் விநியோகம் செய்ய SETC திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக 1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்வதற்கான இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது.

error: Content is protected !!