News July 6, 2024
ராகுல்காந்திக்கு சீக்கிய மத அமைப்பு கண்டனம்

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குருநானக் புகைப்படத்தை காண்பித்து கருத்து தெரிவித்ததற்கு, சீக்கிய மத அமைப்பான சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குருநானக்கின் படம் அபய முத்திரையை காட்டுகிறது என ராகுல் கூறியது முற்றிலும் தவறு என்றும், தெளிவில்லாமல் அரசியல் விவாதங்களில் தங்கள் கடவுளை பயன்படுத்தக் கூடாது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 23, 2025
பிரபல நடிகை கர்ப்பம்.. PHOTO

நடிகை கத்ரீனா கைஃப் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதை, இன்ஸ்டாவில் போட்டோ வெளியிட்டு அறிவித்துள்ளார். நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கப் போவதாக அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் விக்கி கௌசலுக்கும் (37), நடிகை கத்ரீனா கைஃப்பிற்கும் (42) கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
News September 23, 2025
கனிமொழிக்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்

அமித்ஷா வீட்டில்தான் அதிமுக அலுவலகம் அமைத்துள்ளது என கனிமொழி கூறியதற்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக அலுவலகம் சென்னையில் தான் அமைந்துள்ளது எனவும், வந்து பாருங்கள் எனவும் கனிமொழிக்கு அவர் அழைப்புவிடுத்தார். மேலும், அதிமுக அலுவலகத்தை திமுக ஆள் வைத்து தகர்க்க பார்த்ததாக குற்றம்சாட்டிய அவர், ஸ்டாலின் எத்தனை அவதாரங்கள் எடுத்து வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என கூறினார்.
News September 23, 2025
அஸ்வினை எடுக்க போட்டி போடும் ஆஸி., அணிகள்

ஆஸ்திரேலியாவின் IPL-ஆன Big Bash League தொடரில் அஸ்வினை எடுக்க, பல்வேறு அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே, UAE-ல் டிச.2-ம் தேதி தொடங்க உள்ள ILT20 தொடருக்கான ஏலத்திற்கு அவர் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், டிச.14-ம் தேதி தொடங்க உள்ள Big Bash League-ல் அவருக்கான மவுசு அதிகரித்துள்ளதால், 2 தொடர்களிலும் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.