News July 6, 2024
மாதிரி செவ்வாய் கிரகத்தில் ஒராண்டு வாழ்ந்த 4 பேர்

அமெரிக்காவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் செவ்வாய் கிரகத்தின் மாதிரி வடிவத்தை 3டி தொழில்நுட்பத்தின் மூலம் நாசா உருவாக்கியது. 1.722 சதுர அடியில் அமைக்கப்பட்ட இதில், கடந்த 370 நாட்களாக நான்கு விண்வெளி வீரர்கள் தங்க வைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து அறிந்து கொள்வதே இதன் நோக்கமாகும். இந்த சோதனை இன்றுடன் நிறைவடைகிறது.
Similar News
News September 23, 2025
பெரம்பலூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? Call Now

பெரம்பலூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News September 23, 2025
மகளிர் உரிமைத் தொகை.. வந்தது ஹேப்பி நியூஸ்

குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாள்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை பெற்றவர்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதில் தகுதியான பெண்களுக்கு ₹1000 வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
News September 23, 2025
திமுக MPக்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக MP-க்களின் ஆலோசனைக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. வாக்குத் திருட்டு புகார் தொடர்பாக போராட்டம் நடத்துவது, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.