News July 6, 2024
இந்தியா, ஜிம்பாப்வே போட்டியை எதில் பார்க்கலாம்?

இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் குழு சேனல்களில் நேரலையாக காண முடியும். இது அனைத்தும் கட்டண சேனல்கள் ஆகும். இதேபோல் ஓடிடியில் இப்போட்டியை காண வேண்டுமெனில், சோனி லைவ் ஓடிடியில் காணலாம். இதுவும் கட்டண அடிப்படையிலேயே ஒளிபரப்பப்படுகிறது. சோனி லைவ் ஓடிடி சந்தா கட்டியோரே இதை காணலாம்.
Similar News
News September 23, 2025
AI-ஆல் பெண்களுக்கு தான் அதிக பாதிப்பா!

AI-ஆல் ஆண்களை விட பெண்கள் வேலையிழக்கும் அபாயம் அதிகம் என ஐநா தெரிவித்துள்ளது. தொழில்நுட்பத்துறையில் பெண்களின் 28% வேலைகளும், ஆண்களின் 21% வேலைகளும் AI-ஆல் செய்யமுடியும். இதற்கு, இத்துறையில் பெண்கள் குறைவாக இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், 2030-க்குள் 34.3 கோடி பெண்கள் பாதிக்கப்படலாம். எனவே, இந்த பாலின பாகுபாடை உடனடியாக சரி செய்ய ஐநா வலியுறுத்தியுள்ளது.
News September 23, 2025
RECIPE: குதிரைவாலி- கருப்பட்டி ஆப்பம்!

குதிரைவாலி அரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும் *இளநீரை புளிக்க வைத்து மாவில் சேர்த்து, 6 மணி நேரம் புளிக்க வைக்கவும் *கருப்பட்டியை கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும், வடிகட்டி மாவில் சேர்க்கவும் *இந்த மாவை ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் பஞ்சு போன்றும் சுட்டு எடுத்தால், சுட சுட குதிரைவாலி- கருப்பட்டி ஆப்பம் ரெடி. SHARE.
News September 23, 2025
I Don’t care: சர்ச்சைக்கு பதிலளித்த பாக். வீரர்

ஆசிய கோப்பையில் இந்தியா உடனான Super 4 ஆட்டத்தில், பாக்., வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் விளாசியிருந்தார். அதனை கொண்டாடும் விதமாக பேட்டை வைத்து துப்பாக்கி சுடுவதுபோல செய்கை காட்டினார். இக்காட்சிகள் இந்திய ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், அரைசதம் அடித்ததால் அப்படி கொண்டாடியதாகவும், பிறர் என்ன நினைப்பார்கள் என்பதில் தனக்கு கவலையில்லை எனவும் ஃபர்ஹான் கூறியுள்ளார்.