News July 5, 2024
மாவட்ட நிர்வாகத்தின் செயலில் சந்தேகம் – எஸ்டிபிஐ

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து வெளியேற்றும் முயற்சியில் தீவிரம் காட்டும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு, தொழிற்சாலை நிர்வாகத்திற்காக செயல்படுகிறதோ என சந்தேகத்தை எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News July 10, 2025
நெல்லை: தாசில்தார் லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

தாசில்தாரின் பணிகளான சான்றிதழ்கள் (சாதி, குடிமை, குடியிருப்பு, மதிப்பீடு) வழங்குதல், பட்டா மாற்றம், சிட்டா, அடங்கல் பராமரித்தல், அரசு வரிகள் வசூல், தேர்தல் பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. நாம் இதுவரை ஏதேனும் ஒரு காரணத்திற்காக தாசில்தார் அலுவலகம் சென்றிருப்போம், இவற்றில் ஏதேனும் ஒன்றில் லஞ்சம் தொடர்பான புகார் எழுந்தால் 04622580908 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். பிறரும் பயன் பெற ஷேர் பண்ணுங்க.
News July 10, 2025
செவிலியர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு

அரசு கிராம பகுதி சமுதாய செவிலியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை விடுத்துள்ள அறிக்கை: செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் 11 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனை அருகே நடைபெற உள்ளது. இதில் நெல்லை மாவட்ட செவிலியர்கள் விடுப்பு எடுத்து சீருடை அணிந்து பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
News July 10, 2025
நெல்லை: 23 கொலைகள்; கதி கலங்கும் மக்கள்

நெல்லை மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக கொலைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும், முன்விரோதம், சொத்துத் தகராறு, பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற காரணங்களுக்காக 22 கொலை வழக்குகளில் 23 உயிர்கள் பறிபோயுள்ளன. இந்த தொடர் கொலைச் சம்பவங்கள் நெல்லை மாவட்டத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளன.