News July 5, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் நீர்மட்டம் விவரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,739 மில்லியன் கனஅடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 128 மில்லியன் கனஅடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,482 மில்லியன் கனஅடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 65 மில்லியன் கனஅடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 300 மில்லியன் கனஅடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஜூலை 5) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 30, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News August 30, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நெடுஞ்சாலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து அலகு அலுவலர்கள் (ம) தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்ட (NHAI) அனைத்து அலகு அலுவலர்களுடன் இக்கூட்டம் நடைபெற்றது.
News August 30, 2025
BREAKING-திருவள்ளூர் எம்.பி மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் ரத்த அழுத்தம் அதிகரித்ததால் அரசு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை வழங்கக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.