News July 5, 2024
தனுஷுக்காக வரிசை கட்டி நிற்கும் கதைகள்

நடிகர் தனுஷுக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி காத்திருப்பதாக திரை வட்டாரங்கள் கூறுகின்றன.
அவர் நடித்துள்ள ராயன், குபேரா படங்கள் வெளியாகவுள்ள நிலையில், இளையராஜா பயோபிக் படத்தில் நடிக்கவுள்ளார். இதனைதொடர்ந்து, ‘போர் தொழில்’ பட இயக்கிய விக்னேஷ் ராஜாவுடன் கூட்டணி சேர உள்ளதாக தெரிகிறது. க்ரைம் திரில்லர் கதைக்களத்திலான அப்படத்தின் ஒன் லைன் சொல்லி ஓகே வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
Similar News
News September 22, 2025
5 மனைவிகள், 12 குழந்தைகள் உடன் வாழ்ந்த MR ராதா

ஆரம்பத்தில் நாடக கம்பெனியில் உடன் நடித்த பிரேமாவதி என்பவரை காதலித்து திருமணம் செய்த MR ராதாவுக்கு ஒரு மகன் பிறந்தார். பின்னர், மனைவி, மகன் இருவரும் அம்மை நோயால் இறந்தனர். இதனையடுத்து, சரஸ்வதி, தனலட்சுமி என்ற சகோதரிகள் மற்றும் ஜெயம்மாள் ஆகியோரை வெவ்வேறு ஊர்களுக்கு சென்றபோது திருமணம் செய்துகொண்ட நடிகவேளுக்கு மொத்தம் 12 குழந்தைகள். கடைசியாக திருமணம் செய்த கீதா ராதாவின் குழந்தைகளே ராதிகா, நிரோஷா.
News September 22, 2025
பாக்., ராணுவத்துக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்கள்

பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் எழுந்துள்ளது. பலூச்சிஸ்தான் தனிநாடு போராட்டம் தீவிரமாக உள்ள நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. இன்று அங்கே ஒரு கிராமத்தில் பாக்., நடத்திய விமான தாக்குதலில் <<17793529>>30 பேர்<<>> கொல்லப்பட்டனர். இந்நிலையில், அங்கு ஆயுத போராட்டம் தொடங்கும் சூழல் உள்ளதாகவும், பெஷாவர் விமானப்படை தளம் முற்றுகையிடப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
News September 22, 2025
போராட்டங்களை சந்திக்கும் நாடுகள் PHOTOS

சமீப காலமாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றில், சமூக ஊடக செயலி தடைகள், ஊழல், சில பிரிவினரின் கோரிக்கைகள், குடியேற்ற எதிர்ப்பு உள்ளிட்டவை அடங்கும். மேலே, எந்தெந்த நாடுகளில் போராட்டம் என்று போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. ஏதேனும் விடுபட்டிருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.