News July 5, 2024

சர்வதேச சிலம்பம் போட்டி: மாணவிக்கு பாராட்டு விழா

image

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் மாணவி மலேசியா நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான சிலம்பம், கம்பு சண்டை போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவிக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு மாணவியை வாழ்த்தினர்.

Similar News

News September 13, 2025

வாகனங்களில் பயணிப்போருக்கு எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (13-09-2025) மாவட்ட மக்களுக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் ”மக்கள் தங்களின் பயணத்தின்போது ஜன்னல் வழியாக பயணிகள் கை, கால், தலையை நீட்டாதீர்கள் உங்களுடைய கவனக்குறைவால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது” என எச்சரிக்கையாக இருக்க காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.

News September 13, 2025

AIஅறிவியல் மாநாடு முன்னாள் விஞ்ஞானி பங்கேற்பு

image

திருப்பத்தூர் நகராட்சி சக்தி நகர் பகுதியில் உள்ள தூயநெஞ்ச கல்லூரியில் இன்று (செப்-13) AIஅறிவியல் மாநாடு நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். மேலும் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

News September 13, 2025

சாலை பாதுகாப்பு ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட சுற்றுலா மாளிகையில் மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை முதல் நிலை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கஜலட்சுமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி முன்னிலையில் நடைபெற்றது. உடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

error: Content is protected !!