News July 5, 2024
கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

அரசு கலைக் கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்றுடன் அதற்கு அவகாசம் நிறைவடைவதால் மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். இவர்களை கல்லூரியில் சேர்க்கும் நடவடிக்கைகள் ஜூலை 8ஆம் தேதி தொடங்குகிறது.
Similar News
News September 22, 2025
பாக்., வீரரின் மனைவிக்கு பாடம் புகட்டிய இந்திய ரசிகர்கள்

ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியாவின் 6 ஜெட் விமானங்களை வீழ்த்தியதாக பாக்., கூறுவதை, ‘6- 0’ என்ற சைகைகளால் வெளிப்படுத்தினார் பவுலர் ஹாரிஸ் ராஃப். இந்நிலையில், ‘நாங்கள் விளையாட்டில் தோல்வியுற்றோம், ஆனால் போரில் வென்றோம்’ என அவரது மனைவி முஜ்னா மசூத் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், விளையாட்டு, போர் என எதிலும் இந்தியாவே வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
News September 22, 2025
பெண்களே முகத்தில் முடி வளருதா? இதோ நிரந்தர தீர்வு

பெண்களே, முகத்தில் காது, கழுத்து, வாய்க்கு மேல் முடி வளருதா? இதற்கு என்ன க்ரீம் பயன்படுத்தினாலும் பலன் அளிக்கவில்லையா? இந்த ஒரு சிம்பிள் டிரிக் போதும். கிழங்கு மஞ்சளை எலுமிச்சை சாறுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவுங்கள். வாரத்திற்கு 3 முறை இதை செய்துவந்தால் முகத்தில் முடி வளருவது குறையும். சில சமயங்களில் ஹார்மோன் பிரச்னையாலும் முகத்தில் முடி வளரும் என்பதால் டாக்டரை அணுகுங்கள். SHARE.
News September 22, 2025
தமிழ்நாட்டின் பெருமைகள்

தமிழ்நாட்டில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள், பண்பாட்டு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை பிரதிபலிக்கின்றன. இவை நமது பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. அவை என்ன இடங்கள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. மேலும், யுனெஸ்கோ அங்கீகாரம் வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் தளங்களை கமெண்ட்ல சொல்லுங்க.