News July 5, 2024
இந்திக்கு எதிர்ப்பு, உருதுக்கு இல்லையா?

மீனவர்களின் குழந்தைகளுக்கு கடல் சார்ந்த கல்வி கற்றுத்தரப்படும் எனக் கூறுவது குலக்கல்வி இல்லையா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மாநில கல்விக் கொள்கை குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் அதிக உருது பள்ளிகளை திறக்க வேண்டும் என மாநில கல்விக்கொள்கை கூறுகிறது. இந்தி திணிப்பை எதிர்க்கும் திமுக, ஏன் உருது திணிப்பை ஆதரிக்கிறது? என்றும் வினவியுள்ளார்.
Similar News
News September 22, 2025
GST சேமிப்பு திருவிழா தொடங்கியது: PM மோடி

இன்று முதல் GST சேமிப்பு திருவிழா தொடங்கியுள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், விவசாயிகள், பெண்கள், சிறு குறு நிறுவனங்கள் ஆகியவை GST சீர்திருத்தங்கள் மூலம் சேமிப்பை அதிகரிக்க முடியும் என்று கூறியுள்ளார். உள்நாட்டு பொருள்களை வாங்க வேண்டும் என்ற மோடி, தொழில், உற்பத்தி, முதலீட்டு சூழலை மேம்படுத்த மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News September 22, 2025
Cinema Roundup: காந்தாராவுக்கு குரல் கொடுத்த மணிகண்டன்

*தனுஷின் ‘இட்லி கடை’ படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. *’காந்தாரா சாப்டர் 1′ தமிழ் டப்பிங்கில் ரிஷப் ஷெட்டிக்கு ‘லவ்வர்’ மணிகண்டன் குரல் கொடுத்துள்ளார். * ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் ஷுட்டிங் பூஜையுடன் தொடங்கியது. * ரஜினியின் ‘மனிதன்’ படம் அக்.10-ம் தேதி ரீ-ரிலீசாகிறது. * கார் ரேஸிங் 24H சீரிஸில் அஜித் குமாரின் அணி 3-வது இடத்தில் உள்ளது.
News September 22, 2025
இந்த நாடுகள்தான் பெஸ்ட்

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான உணவுகள் கிடைக்கும். அதில், சில நாடுகளின் உணவுகள் சுவை மிக்கவையாக உள்ளன. அந்த வகையில், உலகில் சுவையான உணவு கிடைக்கும் நாடுகள் எது என்று மேலே கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத வேறு ஏதேனும் நாடுகள் உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.