News July 4, 2024
அமெரிக்காவில் நடைபெற்ற சந்திப்பு

‘தி கோட்’ படத்தின் VFX பணிகளுக்காக இயக்குநர் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்றுள்ளார். அதேபோல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் ‘மகாராஜா’ திரையிடலுக்காக நடிகர் விஜய் சேதுபதியும் அங்கு சென்றுள்ளார். மேலும் நடிகர் சூரியும் அங்கு இருப்பதால் இம்மூவரும் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளனர். வெங்கட் பிரபு பகிர்ந்த அந்த செல்ஃபி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Similar News
News November 28, 2025
வேலூர்: சமூக நீதி & மனித உரிமை விழிப்புணர்வு!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ. மயில்வாகனன் தலைமையில் இன்று (நவ.28) பீஞ்சமந்தை, ஜார்தான் கொள்ளை, பாலம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த 48 கிராம மக்களுக்கும் மாணவர்களுக்கும் சமூக நீதி மற்றும் மனித உரிமை விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. 400 பேருக்கு அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு குறித்து அவர் ஊக்கமளித்தார்.
News November 28, 2025
RCB-யை தொடர்ந்து ஏலத்திற்கு வரும் RR?

RCB அணியின் உரிமை கைமாறவுள்ளது அறிந்த செய்தியே. அந்த அணியை வாங்க பலத்த போட்டி நிலவி வரும் நிலையில், தற்போது RR அணியும் ஏலத்திற்கு வந்துள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், இன்னும் RR அணியின் உரிமம் கைமாறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், இத்தகவல் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.
News November 28, 2025
ரெட் அலர்ட்: 14 மாவட்டங்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

டிட்வா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, <<18379714>>ரெட் அலர்ட்<<>>, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு CM ஸ்டாலின் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். 14 மாவட்ட கலெக்டர்களிடம் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய அவர், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்


