News July 4, 2024
தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாரா? எடியூரப்பா

கர்நாடகாவில் தற்போது தேர்தல் நடைபெற்றால் 150 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் சவால் விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 19 தொகுதிகளில் பாஜக வென்ற நிலையில், 142 சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சி அதிக வாக்குகளை பெற்றது.
Similar News
News November 28, 2025
புதுச்சேரி: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், நாளை (நவ.29) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
FLASH: டிச.4-ல் இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடின்

2 நாள்கள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் வரும் 4-ம் தேதி இந்தியா வருகிறார். 4-ம் தேதி அன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு, PM மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளார். மறுநாள் 23-வது இந்தியா – ரஷ்யா ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்தியா – அமெரிக்கா வர்த்தக பிரச்னை நீடிக்கும் நிலையில், ரஷ்யா உடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு புடின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
News November 28, 2025
வெனிஸ் அழகை ரசித்த அஜித் பேமிலி (PHOTOS)

அண்மையில் இத்தாலியில் ஜென்டில்மேன் டிரைவர் விருதை, அஜித்துக்கு வழங்கி பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் கௌரவித்திருந்தது. இந்த விருதை பெற அஜித் தனது குடும்பத்துடன் வெனிஸ் சென்ற நிலையில், அந்த போட்டோஸை இப்போது ஷாலினி பகிர்ந்துள்ளார். வெனிஸ் நகரின் அழகியலோடு எடுக்கப்பட்டுள்ள அஜித் பேமிலி போட்டோஸ் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. மேலே உள்ள அந்த போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்.


