News July 4, 2024
வீரர்களிடம் இருப்பது போலி உலகக்கோப்பையா?

டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வெற்றி விழாவில் பங்கேற்க கோப்பையுடன் மும்பை சென்றுள்ளது. ஆனால், இந்திய வீரர்களின் கையில் உள்ள உலகக்கோப்பை போலியானது என சொன்னால் நம்புவீர்களா? ஆம், வெற்றி பெற்ற வீரர்களின் கையில் இருப்பது உண்மையான கோப்பை போலவே காட்சி அளிக்கும் மாதிரி கோப்பைதான். உண்மையான கோப்பை துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 22, 2025
வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் வேலைக்கு செல்லும் வயதினரின்(15–59) எண்ணிக்கை 66%-ஆக அதிகரித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு 100 பேரிலும் 66 பேர் வேலை செல்லக்கூடிய நபராக இருக்கிறார்களாம். குறிப்பாக, டெல்லியில் வேலைக்கு செல்லும் ஆண்களை(70.9%) விட பெண்களின் எண்ணிக்கை(70.9%) அதிகம். 1971-ல் 53%-ஆக இருந்த வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை, 2023-ல் 66.1%-ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என சொல்கின்றனர்.
News September 22, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

வட்டி விகிதத்தை RBI மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாக SBI கணித்துள்ளது. புதிய GST-யால் விலை குறியீட்டு எண்(CPI) 65-75 bps குறையும். இதனால் 2004-க்கு பிறகு CPI 1.1%-க்கு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செப்.29-ல் தொடங்கும் RBI-யின் பாலிசி கூட்டத்தில் வட்டி விகிதம் (தற்போது 5.5.%) குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தனிநபர், வாகன & வீட்டுக் கடன்களுக்கான வட்டியும் குறையும்.
News September 22, 2025
விஜய் பின்புலத்தில் மோடி, அமித்ஷா: அப்பாவு

மத்திய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து, திமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க பார்க்கிறது என்று சபாநாயகர் அப்பாவு குற்றஞ்சாட்டியுள்ளார். பின்புலத்தில் மோடி, அமித்ஷா இருக்கும் தைரியத்தில்தான், அரசியல் அடிச்சுவடே தெரியாமல், சினிமாவில் பேசுவதுபோல் அகந்தையோடு விஜய் பேசுகிறார் என்று சாடிய அவர், இனியாவது அரசியல் கட்சித் தலைவராக கண்ணியத்துடன் பேசுவது அவருக்கு நல்லது என்றும் தெரிவித்தார்.