News July 4, 2024

திமுக அரசு தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும்: இபிஎஸ்

image

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி ஒருவர் உயிரிழந்ததற்கு, இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி சுவடு மறைவதற்குள் மீண்டும் உயிரிழப்பு நடந்துள்ளதாக சாடிய அவர், திமுக அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது? என்றும் வினவியுள்ளார். கள்ளச்சாராயம் அருந்தியதாக இன்று காலை மூவர் விழுப்பும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Similar News

News September 22, 2025

லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

வட்டி விகிதத்தை RBI மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாக SBI கணித்துள்ளது. புதிய GST-யால் விலை குறியீட்டு எண்(CPI) 65-75 bps குறையும். இதனால் 2004-க்கு பிறகு CPI 1.1%-க்கு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செப்.29-ல் தொடங்கும் RBI-யின் பாலிசி கூட்டத்தில் வட்டி விகிதம் (தற்போது 5.5.%) குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தனிநபர், வாகன & வீட்டுக் கடன்களுக்கான வட்டியும் குறையும்.

News September 22, 2025

விஜய் பின்புலத்தில் மோடி, அமித்ஷா: அப்பாவு

image

மத்திய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து, திமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க பார்க்கிறது என்று சபாநாயகர் அப்பாவு குற்றஞ்சாட்டியுள்ளார். பின்புலத்தில் மோடி, அமித்ஷா இருக்கும் தைரியத்தில்தான், அரசியல் அடிச்சுவடே தெரியாமல், சினிமாவில் பேசுவதுபோல் அகந்தையோடு விஜய் பேசுகிறார் என்று சாடிய அவர், இனியாவது அரசியல் கட்சித் தலைவராக கண்ணியத்துடன் பேசுவது அவருக்கு நல்லது என்றும் தெரிவித்தார்.

News September 22, 2025

அக்டோபரில் தொடங்கும் அஜித்தின் புதிய படம்?

image

GBU படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்னும் வெளியாகாமலேயே இருக்கிறது. இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் புதிய பட ஷூட்டிங் அக்டோபரில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மலையாள நடிகர் மோகன்லால், 2026 ஜனவரியில் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். அஜித் – ஆதிக் – மோகன்லால் காம்போ எப்படி இருக்கும்?

error: Content is protected !!