News July 4, 2024
புதுக்கோட்டை இளைஞர்களே யூஸ் பண்ணிக்கோங்க

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்டம் இணைந்து நடத்தும் அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை 7ம் தேதி தொடங்குகிறது. இதில் சேர விரும்புவோர் 9786441417, 9445955451, 9943832324 இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தன்னார்வ பயிலும் வட்ட ஒருங்கிணைப்பாளர் பா.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 17, 2025
புதுக்கோட்டையில் 4 பேர் மீது குண்டர் சட்டம்

ஆலங்குடியில் ஜூலை 16ஆம் தேதி டாஸ்மாக் முன்பு ரஞ்சித் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் அருவாளால் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக ஆலங்குடி போலீசார் ஸ்ரீதர், கலையரசன், வெங்கடேஷ், மதிவாணன் ஆகிய 4 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி அபிஷேக் குப்தா பரிந்துரையின் பேரில் நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.
News August 17, 2025
புதுக்கோட்டையில் 20 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று மது விற்ற 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 543 மது பாட்டில்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. புதுகை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் இவை கைப்பற்றியதாக மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த 20 பேர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
News August 17, 2025
புதுக்கோட்டை: மின்தடையா ? உடனே கால் பண்ணுங்க

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழகத்தின் எந்த ஒரு மின் வாரியத்தையும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!