News July 4, 2024
3வது மாதமாக ரேஷன் பொருள்களுக்கு தட்டுப்பாடு

தமிழகம் முழுவதும் 3வது மாதமாக ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதலில் மே மாதம் துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின், அம்மாதத்திற்கான பொருள்கள் ஜூன் மாதம் கொடுக்கப்பட்டது. தற்போது, ஜூலை மாதம் வந்துவிட்ட நிலையில், ஜூன் மாதத்திற்கான பொருள்களே வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. விநியோகம் சீராகாத காரணத்தினால் முழுவதுமாக பொருள்களை வழங்க இயலவில்லை என கூறப்படுகிறது.
Similar News
News November 27, 2025
TN-ல் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: அன்புமணி

தஞ்சையில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அன்புமணி, தமிழகத்தில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை தொடர்வதாக தெரிவித்துள்ளார். TN-ல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 படுகொலைகள் நடப்பதாக கூறிய அவர், யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்று குற்றஞ்சாட்டினார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க CM நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News November 27, 2025
கம்பீரின் Mind Voice இதுவா? நடிகர் சதீஷ் கிண்டல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்கு பின் கம்பீருக்கு எதிரான Trolls அதிகரித்துவிட்டன. அந்த வரிசையில், கம்பீரின் Mind voice இப்போது எப்படி இருக்கும் என்கிற வகையில் நடிகர் சதீஷ் கிண்டலாக பதிவிட்டுள்ளார். அதில் ‘எல்லாரும் ஓவரா பேசராங்க… பேசாம ஹர்சித் ராணாவ டெஸ்ட் கேப்டனாக அறிவிச்சு fun பண்ணுவோமா’ என்பதே கம்பீரின் Mind voice என குறிப்பிட்டுள்ளார். கம்பீருக்கு இப்படி ஒரு சோதனையா?
News November 27, 2025
பசுக்களுக்கும் Best Friends இருக்கு.. தெரியுமா?

மனிதர்களைப் போலவே பசுக்களுக்கும் சக மாடுகளுடன் நெருங்கிய நட்பு இருக்கிறது என நார்த்தாம்ப்டன் பல்கலை., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு பசுவை அதன் Friend-யிடம் இருந்து பிரித்துவைக்கும் போது அவை மன அழுத்தத்திற்கு ஆளாகி, முரட்டுத் தனமாக நடக்கிறதாம். மீண்டும் அதன் Friend-வுடன் சேர்த்து வைக்கும்போது ஒருவித அமைதியை அவை பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 99% பேருக்கு தெரியாத இத்தகவலை SHARE பண்ணுங்க.


