News July 4, 2024

மண் இலவசம்: திருவள்ளூர் கலெக்டர் விண்ணப்பிக்க அழைப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 446, ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 45 ஏரிகளில், களிமண் மற்றும் வண்டல் மண் போன்ற சிறு கனிமங்களை தூர்வாரி விவசாயம் மண்பாண்ட தொழில், வீட்டு உபயோக பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும் என ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 9, 2025

வினோதமான பழவேற்காடு கல்லறை

image

வினோதமான மண்டைஓடு சிலைகளோடு இந்தியாவில் ஐரோப்பிய காலனித்துவத்திற்கு சாட்சியாக உள்ளது பழவேற்காடு டச்சு கல்லறை. இந்தியாவில் குடியேறிய டச்சுக்காரர்களின் உடல்கள் இதில் புதைக்கப்பட்டுள்ளது. இவர்களில் டச்சு அதிகாரிகள், வணிகர்கள், வீரர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்,பிற முக்கியஸ்தர்கள் அடங்குவர். இங்கு மொத்தம் 76 கல்லறைகள் உள்ளன. இதன் அருகே இவர்கள் கட்டிய கோட்டையும் உள்ளது. ஷேர் பண்ணுங்க

News July 9, 2025

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 11ம் தேதி காலை 10:00 மணியளவில் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடைபெறும். கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். கோட்ட அளவில் தீர்க்கப்படாத குறைகளை மனுவாக விவசாயிகள் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

திருவள்ளூரில் ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் 90 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பல ஊராட்சிகளில் நிர்வாக பிரச்னைகளால் அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரே செயலர் பல ஊராட்சிகளை கவனிப்பதால் பணிச்சுமை அதிகரித்து, மன உளைச்சலுக்கும் உள்ளாகி வருகின்றனர். அரசு நிதி ஒதுக்கீடும், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதும் முக்கிய தேவையாக உள்ளது.

error: Content is protected !!