News July 4, 2024
ஆங்கிலத்தில்தானே இருக்கிறது? அடடே! விளக்கம்

மத்திய அரசு புதிதாக அமல்படுத்தியிருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அப்போது வாதிட்ட மத்திய அரசின் வழக்கறிஞர் சுந்தரேசன், “Bharatiya Nyaya Sanhita என்ற ஆங்கில எழுத்துகள்தான் குற்றவியல் சட்ட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. எனவே, இதில் விதிமீறல் இல்லை” என்று நீதிபதிகளே வியக்கும் விதத்தில் விளக்கமளித்தார்.
Similar News
News September 22, 2025
திங்கள்கிழமையில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமா?

திங்கள்கிழமைகளில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. லீவ் முடிந்து திங்கள்கிழமை வேலைக்கு போகும்போது நமக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்குமாம். இது மாரடைப்புக்கான முக்கிய காரணமாக உள்ளது. மேலும், வார இறுதியில் அதிகமாக மது அருந்துவதால் HighBP ஏற்பட்டு இதய செயலிழப்புக்கு வழிவகுக்குமாம். இதிலிருந்து தப்பிப்பது எப்படி என தெரிந்துகொள்ள <<17790792>>க்ளிக் பண்ணுங்க<<>>. SHARE.
News September 22, 2025
கிஸ் vs சக்தித் திருமகன்: பாக்ஸ் ஆபிசில் முந்தியது யார்?

செப்டம்பர் 19-ம் தேதி பல படங்கள் வெளியான போதிலும், ‘கிஸ்’ & ‘சக்தித் திருமகன்’ ஆகிய படங்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன. 3 நாள் முடிவில், ‘கிஸ்’ படம் ₹1.76 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில், ‘சக்தித் திருமகன்’ ₹3.79 கோடியை வசூலித்துள்ளதாம். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மேலும் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
News September 22, 2025
RECIPE: சுவையான கேழ்வரகு வடை!

கால்சியம் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு கேழ்வரகு நல்லது. இதில் வடை செய்தால், அனைவரும் ரசித்து உண்பார்கள் *கேழ்வரகு மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை வடை பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும் *இதனை பொன்னிறமாக பொரித்தெடுத்தால் சுவையான, ஹெல்தியான கேழ்வரகு வடை ரெடி. இப்பதிவை நண்பர்களுக்கும் பகிருங்கள்.