News July 4, 2024
அதிமுகவினர் பாமாவுக்கு வாக்களிக்கவும்: ராமதாஸ்

விக்கிரவண்டி இடைத்தேர்தலில், அதிமுகவினர் வாக்கை வீணடிக்காமல் பாமாவுக்கு வாக்களிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். திண்டிவனம் அருகே உள்ள தைலதாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக வேட்பாளர் தோல்வி அடைந்து விடுவார் என்று தெரிந்ததும், திமுக அரசு அடக்குமுறையை கையாண்டு வருவதாகவும், அதிமுகவும் பாமகவுக்கு பொது எதிரி திமுக தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
விழுப்புரம் புதுச்சேரி ரயில் சேவை ரத்து

விழுப்புரத்தில் இருந்து காலை 5:25 மணிக்கும், புதுச்சேரியில் இருந்து காலை 8:05 மணிக்கும் புறப்படும் விழுப்புரம்- புதுச்சேரி பாசஞ்சர் ரயில்கள் (எண் 66063 மற்றும் 66064) திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக வரும் ஜூலை 10ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரையில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
News July 8, 2025
விழுப்புரம்-சென்னை கடற்கரை ரயில் பகுதியாக ரத்து

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக, விழுப்புரத்தில் இருந்து பகல் 2:40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் (எண் 66046) வரும் ஜூலை 12 மற்றும் ஜூலை 15ம் தேதிகளில் முண்டியம்பாக்கத்தில் இருந்து பகல் 2:55 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
News July 8, 2025
தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

தாம்பரத்தில் இருந்து காலை 9:45 மணிக்கு விழுப்புரத்திற்கு புறப்படும் தாம்பரம் ~விழுப்புரம் பாசஞ்சர் ரயில் (எண் 66045) வரும் ஜூலை12 மற்றும் ஜூலை15ம் தேதிகளில் திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.