News July 4, 2024
ரேஷன் கார்டில் பெயர் நீக்க ஒப்புதல் தர தாமதம்?

புதிய ரேஷன் கார்டு பெற ஏற்கெனவே உள்ள கார்டில் பெயர் இருக்கக்கூடாது. இதனால், திருமணமானவர்கள் பெற்றோர் கார்டுகளில் இருந்து பெயரை நீக்கி புதிய கார்டுக்கு விண்ணப்பம் செய்வர். ஆனால், பெயர் நீக்கம் கோரினால், ஒப்புதல் தராமல் அதிகாரிகள் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. ₹1000 உரிமைத்தொகை பெற பெற்றோருடன் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் கூட புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பதால் இச்சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.
Similar News
News September 22, 2025
விஜய்க்கு தகுதியே இல்லை: KN நேரு

இபிஎஸ், விஜய்யை KN நேரு கடுமையாக விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி என விஜய் கூறிய நிலையில், திமுகவுடன் நேரடியாக மோத உனக்கு(விஜய்) தகுதியே இல்லை தம்பி என அவர் சாடியுள்ளார். மேலும், 4 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டு, தற்போது இபிஎஸ் வெளியே வந்திருப்பதாக குறிப்பிட்ட நேரு, பாஜகவுடனான கூட்டணியை அதிமுக தொண்டர்கள் ஏற்கவில்லை என்றார்.
News September 22, 2025
இனி ₹14 மட்டுமே.. இன்று முதல் விலை குறைந்தது

அனைத்து ரயில் நிலையங்களிலும் விற்கப்படும் ரயில் நீர் பாட்டில்கள் விலை லிட்டருக்கு ₹1 குறைந்து இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. GST வரி குறைப்பின் பலனை ரயில் பயணிகள் பெறும் வகையில் பேக்கேஜ் செய்யப்பட்ட ரயில் நீர், ஒரு லிட்டர் ₹15-லிருந்து ₹14-ஆகவும், அரை லிட்டர் ₹10-லிருந்து ₹9-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், விலை குறைப்பு விவரங்களை பயணிகளுக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 22, 2025
‘லோகா’ பட ஓடிடி ரிலீஸ் வதந்திக்கு முற்றுப்புள்ளி

அதிக வசூலை ஈட்டிய மலையாளப் படம் என்ற சாதனையை படைத்துள்ள ‘லோகா’, விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. இதனை படத்தின் தயாரிப்பாளரான நடிகர் துல்கர் சல்மான் மறுத்துள்ளார். ‘லோகா’ பட ஓடிடி வெளியீடு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்த அவர், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உங்களுக்கு ‘லோகா’ படம் பிடிச்சிருந்ததா?