News July 4, 2024

தம்பதியர் ஒற்றுமை காக்கும் உத்திரகோசமங்கை கோயில்

image

‘வலை வீசி மீன் பிடித்த படலம்’ என்ற திருவிளையாடலை ஈசன் நடத்திய திருத்தலம் ராமநாதபுரம் உத்திரகோசமங்கை கோயிலாகும். தமிழ் மன்னன் ராவணன், மண்டோதரி திருமணம் நடந்ததாக மயன் புராணம் கூறும் பெருமை பெற்றது. இக்கோயிலுக்கு விரதமிருந்து சென்று மங்களநாதர் – மங்களநாயகிக்கு சந்தன அபிஷேகம் செய்து, நெய் தீபமேற்றி, ரோஜா மாலை சாற்றி வணங்கினால் கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை பலப்படும் என்பது ஐதீகம்.

Similar News

News November 27, 2025

நாளை பள்ளிகள் விடுமுறையா? CM ஸ்டாலின் ஆலோசனை

image

வங்கக்கடலில் 3 மணி நேரத்தில் ‘டிட்வா’ புயல் உருவாகவுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இந்த புயல் வட தமிழகத்தை நோக்கி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து CM ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பது; மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது; உதவி மையங்கள் அமைப்பது; அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் விடுமுறை அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

News November 27, 2025

டி.கே.சிவக்குமாரை CM ஆக்க காங்., சத்தியம் செய்ததா?

image

யாராக இருந்தாலும் சரி கொடுத்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என டி.கே.சிவக்குமார் பதிவிட்டுள்ளார். 2023-ல் கர்நாடக பவர் ஷேரிங் குறித்து ஒரு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் முதல் 2.5 ஆண்டுகள் சித்தராமையாவும் அடுத்த 2.5 ஆண்டுகள் DKS-ம் CM-ஆக செயல்படுவர் என காங்., மேலிடம் வாக்குகொடுத்ததாம். இந்நிலையில், இந்த சத்தியத்தை நினைவுப்படுத்தவே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

News November 27, 2025

நடிகை அம்பிகா வீட்டில் சோகம்.. கண்ணீர் அஞ்சலி

image

பிரபல நடிகைகள் அம்பிகா மற்றும் ராதாவின் தாயார் சரசம்மா நாயர்(87) காலமானார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்கு திருவனந்தபுரம் அருகே உள்ள அவர்களது சொந்த ஊரான கல்லாராவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த சரசம்மா, 2014-ம் ஆண்டு வரை கேரளா மகிளா காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

error: Content is protected !!