News July 3, 2024

ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

image

நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது என்று கூறி, மாணவ சமுதாயத்தையே ஆர்.எஸ்.பாரதி அவமதித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கள்ளச்சாராயத்தால் 65 பேர் பலியானதை மடைமாற்ற ஆர்.எஸ்.பாரதியை திமுக களமிறக்கியுள்ளதாக விமர்சித்த அவர், பொதுமக்களிடம் திமுகவுக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் இதே போன்று அவர் கீழ்த்தரமாக பேசுவதாக தெரிவித்துள்ளார்.

Similar News

News September 22, 2025

30-ம் தேதிக்குள் தயாராக இருங்கள்: ECI புதிய உத்தரவு

image

பெரும் சர்ச்சைக்கு மத்தியில் சிறப்பு தீவிர திருத்த பணியை(SIR) தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்டது. அதேபோல நாடு முழுவதும் SIR-ஐ மேற்கொள்ள ECI முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்த பணியை மேற்கொள்ள, 30-ந் தேதிக்குள் தயாராக இருக்குமாறு அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளையும் ECI கேட்டுக்கொண்டுள்ளது.

News September 22, 2025

உடல் உறுப்புகளை காலி செய்யும் பழக்க வழக்கங்கள்

image

வயதானவர்களுக்கு வரும் நோய் பாதிப்புகள் இப்போது இளம் தலைமுறையினரையே வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு காரணம் நமது உணவு முறை மற்றும் பிற பழக்கம் வழக்கம்தான். நமக்கே தெரியாமல் நமது பழக்க வழக்கங்கள் பல உடல் உறுப்புகளுக்கு எமனாக மாறுகின்றன. அந்த தவறான பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதை மேலே போட்டோஸாக கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக SWIPE செய்து அறிந்து கொள்ளுங்கள்.

News September 22, 2025

பெண்கள் திமுக மீது கோபத்தில் உள்ளனர்: அன்புமணி

image

போதைப் பொருள் புழக்கத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக அன்புமணி விமர்சித்துள்ளார். விவசாயிகள், மக்களை காப்பாற்ற முடியாத நிலையில் திமுக இருப்பதாகவும், பெண்கள் இப்போதைய ஆட்சி மீது கோபத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த 505-ல், 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் ஆறு, குளம், கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை எனவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!