News July 3, 2024
விக்கிரவாண்டியில் 28 அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம்

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராகிய அன்னியூர் சிவா வெற்றி பெற வைப்பதற்காக அக்கட்சியின் தேர்தல் பணிக்குழுவில் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் மேற்பார்வையில் 28 அமைச்சர்கள் இப்பொழுது களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீதி வீதியாக சென்று வாக்குகள் கேட்டு வருகின்றனர்.
Similar News
News July 8, 2025
விழுப்புரம் புதுச்சேரி ரயில் சேவை ரத்து

விழுப்புரத்தில் இருந்து காலை 5:25 மணிக்கும், புதுச்சேரியில் இருந்து காலை 8:05 மணிக்கும் புறப்படும் விழுப்புரம்- புதுச்சேரி பாசஞ்சர் ரயில்கள் (எண் 66063 மற்றும் 66064) திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக வரும் ஜூலை 10ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரையில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
News July 8, 2025
விழுப்புரம்-சென்னை கடற்கரை ரயில் பகுதியாக ரத்து

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக, விழுப்புரத்தில் இருந்து பகல் 2:40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் (எண் 66046) வரும் ஜூலை 12 மற்றும் ஜூலை 15ம் தேதிகளில் முண்டியம்பாக்கத்தில் இருந்து பகல் 2:55 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
News July 8, 2025
தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

தாம்பரத்தில் இருந்து காலை 9:45 மணிக்கு விழுப்புரத்திற்கு புறப்படும் தாம்பரம் ~விழுப்புரம் பாசஞ்சர் ரயில் (எண் 66045) வரும் ஜூலை12 மற்றும் ஜூலை15ம் தேதிகளில் திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.