News July 3, 2024

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு 

image

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி தென்காசி இசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 9ஆம் நடைபெற உள்ளது. எனவே, இப்போட்டியில் தென்காசி மாவட்ட மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 13, 2025

தென்காசி: குளத்தில் இருந்து எடுக்கபடும் தண்ணீர்

image

தென்காசி, குத்துக்கல்வலசை ஊராட்சி அடவிநயினார் அணை நீர்ப்பாசனத்திற்குட்பட்ட பொதுபணித்துறைக்கு சொந்தமான நெடுங்குளத்தில் 10க்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர் மூலம் வணிக பயன்பாட்டுக்குக்காக எடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாக சொல்லபடுகிறது. நிலத்தடி நீர் சீக்கிரம் வரண்டு விவசாய பயிர்களை காப்பாற்ற முடியாத சூழல் என விவசாயிகளின் வேதனை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 13, 2025

தென்காசி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

image

தென்காசி மக்களே செப்.13ம் தேதி இன்று முதல் தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 13, 2025

தென்காசி: “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் ஆட்சியர் ஆய்வு

image

தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சி, சிந்தாமணியில் நேற்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், புளியங்குடி நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் ஆய்வு மேற்க்கொண்டார்.

error: Content is protected !!