News July 3, 2024
ஒரு வாரத்தில் 494 கிலோ குட்கா பறிமுதல்

சென்னையில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் படி ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 26ந் தேதி முதல் நேற்று வரையிலான ஒரு வார காலத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில், புகையிலை பொருட்களை கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் சம்பந்தமாக 26 வழக்குகளை பதிவு செய்து 30 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 494 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News September 13, 2025
சென்னை: சொந்த வீடு இருக்கா? மாநகராட்சி அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-26ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான ஏப்ரல் 2025 முதல் செப்.2025 வரை சொத்து வரியை செலுத்துவதற்கான கடைசி நாள் செப்.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் வரியை செலுத்த தவறினால், அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 13, 2025
ஆதம்பாக்கம்: பெண் கையை பிடித்து இழுத்தவர் கைது

ஆதம்பாக்கம் பெரியார் நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் நடராஜன் (51). இவர் பாஜகவில் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த 40-வயது பெண்ணின் கையை பிடித்து இழுத்து, தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியதுடன் அதற்கு மறுத்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் ஆதம்பாக்கம் போலீசார் நடராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News September 13, 2025
சென்னை: IOB வங்கியில் வேலை வேண்டுமா?

▶️இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ▶️ இதற்கு Any Degree அல்லது B.E./B.Tech, MBA, M.Sc, MCA, M.E./M.Tech முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். ▶️ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும் ▶️ஆன்லைன் தேர்வு, நேர்காண மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். ▶️நவ.3ஆம் தேதிக்குள் www.iob.in/Careers என்ற இணையதளத்தில் விண்ணபிக்க வேண்டும் ▶️SHARE பண்ணுங்க