News July 3, 2024
தமிழகம் முழுவதும் பானிபூரி கடைகளில் ஆய்வு

தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் விற்கப்படும் பானிபூரிகளில், புற்றுநோயை வரவழைக்கும் நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பானிபூரி விற்கும் கடைகளில் ஆய்வு செய்ய அரசு நேற்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்துவரும் அதிகாரிகள், பானிபூரியின் தரம் குறித்து சோதித்து வருகின்றனர்.
Similar News
News November 19, 2025
பாரதியார் பொன்மொழிகள்

*விழும் வேகத்தை விட, எழும் வேகம் அதிகமாக இருந்தால், தோற்கடிக்க அல்ல உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான். *எந்த ஏற்றத்துக்கும் ஓர் இறக்கம் உண்டு; எந்த துன்பத்திற்கும் ஓர் இறுதி உண்டு; எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு. *உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும். *விழாமல் ஓடுவேன் என்பது நம்பிக்கை. விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்பது தன்னம்பிக்கை.
News November 19, 2025
பெரம்பலூர்: உலகக் கோப்பை வரவேற்ற கலெட்கர்!

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு நேற்று வருகை தந்த ஜூனியர் ஆடவர் ஹாக்கி 2025-க்கான வெற்றி உலகக் கோப்பையினை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்-வீராங்கனைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உலகக் கோப்பையை அறிமுகம் செய்துவைத்தனர்.
News November 19, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ-18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


