News July 3, 2024

ஆட்சியரை சந்தித்து மனு வழங்கிய பாமகவினர்

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகம் மேற்கொண்டு, வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் தருகின்றனர். மேலும், அன்புமணி ராமதாஸ் கூட்டத்திற்கு வரவிடாமல், வாக்காளர்களை தடுத்து நிறுத்துவதாகவும், இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பாமகவினர் மற்றும் பாமக வழக்கறிஞர் பாலு ஆகியோர் ஆட்சியர் பழனியிடம் மனு அளித்துள்ளனர்.

Similar News

News July 8, 2025

விழுப்புரம் புதுச்சேரி ரயில் சேவை ரத்து

image

விழுப்புரத்தில் இருந்து காலை 5:25 மணிக்கும், புதுச்சேரியில் இருந்து காலை 8:05 மணிக்கும் புறப்படும் விழுப்புரம்- புதுச்சேரி பாசஞ்சர் ரயில்கள் (எண் 66063 மற்றும் 66064) திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக வரும் ஜூலை 10ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரையில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

News July 8, 2025

விழுப்புரம்-சென்னை கடற்கரை ரயில் பகுதியாக ரத்து

image

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக, விழுப்புரத்தில் இருந்து பகல் 2:40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் (எண் 66046) வரும் ஜூலை 12 மற்றும் ஜூலை 15ம் தேதிகளில் முண்டியம்பாக்கத்தில் இருந்து பகல் 2:55 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

News July 8, 2025

தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

image

தாம்பரத்தில் இருந்து காலை 9:45 மணிக்கு விழுப்புரத்திற்கு புறப்படும் தாம்பரம் ~விழுப்புரம் பாசஞ்சர் ரயில் (எண் 66045) வரும் ஜூலை12 மற்றும் ஜூலை15ம் தேதிகளில் திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!