News July 3, 2024

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அதிர்ச்சி

image

விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்தது, தனக்கு அதிர்ச்சியளிப்பதாக முகமது ஷமி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்காக 10-15 ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி KING என பெயர் எடுத்தவர்கள் எனவும், அவர்களுக்கு மாற்று வீரர்களை தேர்ந்தெடுப்பது சவாலான காரியம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், கோப்பையை வென்ற பிற்கு ஓய்வை அறிவித்தது நெகிழ்ச்சியான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News November 19, 2025

சற்றுமுன்: தங்கம் விலை மேலும் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றும், 1 அவுன்ஸ் $11 குறைந்து $4,061-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியும் $0.32 குறைந்து $50.64-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் கடந்த 5 நாள்களில் நம்மூர் சந்தையில் தங்கம் விலை சவரனுக்கு ₹4,000 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 19, 2025

பரமக்குடி: கஞ்சா போதையில் வெட்டி கொலை; ஒருவர் கைது

image

பரமக்குடி மஞ்சள்பட்டினம் வைகை ஆற்றுப் பகுதியில்(நவ.17) வேலு, லட்சுமணன் ஆகிய இருவர் மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்தியதில் வேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; லட்சுமணன் கடுமையாக காயமடைந்தார். எமனேசுவரம் போலீஸார் விசாரணையில் என்.வளையனேந்தல் கிராமத்தை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி(26) என்பவர் கைது செய்யப்பட்டார். கஞ்சா போதையில் தோப்பில் நடமாடியதை முதியவர் கண்டித்ததால் கொலை செய்ததாக தகவல்.

News November 19, 2025

அரியலூர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை

image

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், நேற்று (நவ.18) மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமியை சந்தித்து, ஜெயங்கொண்டம் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும், சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு பணி (S.I.R) குறித்தும், சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் சிவராமன் உடனிருந்தார்.

error: Content is protected !!