News July 3, 2024
தூங்கியதால் ஆடும் வாய்ப்பை இழந்தாரா?

கடந்த ஜூன் 22ஆம் தேதி IND vs BAN இடையிலான சூப்பர் 8 போட்டி நடைபெற்றது. அதன்போது, வங்கதேச துணை கேப்டன் டஸ்கின் அகமது தூங்கியதால், அணிக்கான பேருந்தை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அப்போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில், டாஸ் போடுவதற்கு 30 – 40 நிமிடங்களுக்கு முன்பே மைதானத்திற்கு வந்துவிட்டதாக டஸ்கின் தெரிவித்துள்ளார். மேலும், தாமதமாக வந்ததால் தன்னால் ஆட முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News November 19, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

கடந்த 5 நாள்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று(நவ.19) தடாலடியாக உயர்வை கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹11,500-க்கும், சவரனுக்கு ₹800 உயர்ந்து ₹92,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்றும் இந்திய பங்குச்சந்தைகளில் தொடர் சரிவு காரணமாக தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
News November 19, 2025
பள்ளி செல்லும்போது மாணவி கொலை.. தமிழகத்தில் அதிர்ச்சி

பள்ளிக்கு செல்லும் வழியில் +2 மாணவியை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்த மாணவியை மறித்த சேராங்கோட்டையை சேர்ந்த இளைஞர் முனியராஜ் காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவியை கழுத்தில் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
News November 19, 2025
தமிழகத்தை பழிவாங்கும் பாஜக அரசு: CM ஸ்டாலின்

மதுரைக்கும், கோவைக்கும் “NO METRO” என மத்திய அரசு நிராகரித்துள்ளதாக CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் சிறிய மாநகரங்களுக்கு கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிப்பது அழகல்ல. பாஜகவை தமிழர்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு என சாடிய அவர், மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம் என கூறியுள்ளார்.


