News July 3, 2024

மனைவியின் நடிப்பை பாராட்டிய கணவன்

image

கல்கி 2898 AD படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோனை, அவரது கணவர் ரன்வீர் சிங் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பதிவில், “படத்தின் ஒவ்வொரு நொடியையும் தங்களது கண்ணியமிக்க நடிப்பால் உயர்த்தியுள்ளீர்கள். உங்களது நடிப்பின் கவிதைத்தன்மை, விறுவிறுப்பினால் கவர்ந்துள்ளீர்கள். உங்களை எதனுடனும் ஒப்பிட முடியாது. ஐ லவ் யூ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 21, 2025

ராசி பலன்கள் (22.09.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News September 21, 2025

GALLERY: தாதா சாகேப் பால்கே விருது வென்ற தமிழர்கள்!

image

இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுதான் தாதா சாகேப் பால்கே விருது. 1969 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை இதுவரை 49 பேர் வென்றுள்ளார். அதில் 3 பேர் மட்டுமே தமிழர்கள் ஆவர். அவர்கள் யார் என்பதை பார்க்க மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணுங்க!

News September 21, 2025

ஜிஎஸ்டி தாக்கத்தால் சிலிண்டர் விலை குறையுமா?

image

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நாளை அமலாகும் நிலையில், பல பொருள்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, சமையல் சிலிண்டரின் விலை குறையுமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டருக்கு 5%, வணிக சிலிண்டருக்கு 18% ஜிஎஸ்டி வரிகள் உள்ளன. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹905-க்கு விற்கப்படுகிறது. இந்த விலையே சில நாள்களுக்கு தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!