News July 3, 2024

யார் இந்த போலே பாபா? (2/2)

image

1990களின் பிற்பாதியில் இவரது சமய சொற்பொழிவுகளில் மயங்கி ஹரியானா, உத்தரகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் பல அப்பாவி மக்கள் இவரை பின்பற்றுபவர்களாக உள்ளனர். ஆன்மிகத்தில் இருந்தாலும், மத அடையாளத்தை வெளிக்காட்டாத இவருக்கு அரசியல் கட்சிகளுடனும் தொடர்புள்ளது. அவ்வபோது அரசியல் தலைவர்களை சந்திப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இவர் மீது பல குற்ற வழக்குகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News November 26, 2025

செங்கோட்டையனுடன் திமுக அமைச்சர்.. திடீர் திருப்பம்

image

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், திடீர் திருப்பமாக, சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செங்கோட்டையனை திமுக முக்கிய அமைச்சர் சற்றுமுன் சந்தித்து பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது திமுகவில் இணைய வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

News November 26, 2025

இறந்த தாய்.. 4 நாள் ஃபிரிட்ஜில் வைக்க சொன்ன மகன்!

image

உ.பி.யில் முதியோர் இல்லத்தில் இருந்த ஷோபாதேவி இறந்துவிட்டதாக மகனிடம் போனில் கூறப்படுகிறது. ‘வீட்டுல கல்யாணம் நடக்குது.. 4 நாள் ஃபிரிட்ஜில் வைங்க’ என அந்த மகன் கூறி இருக்கிறார். பின்னர் உறவினர்களின் ஏற்பாட்டில், ஷோபா எரிக்கப்படாமல் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறில், வாழும் காலத்திலும் முதியோர் இல்லத்தில் தவிக்கவிட்டு தண்டித்த மகன், இறந்த பிறகும் அத்தாயை மனவேதனையில் ஆழ்த்தியுள்ளார்.

News November 26, 2025

BREAKING: 15 இடங்களில் ED அதிரடி ரெய்டு

image

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ₹2,438 கோடி அளவிலான ஆருத்ரா கோல்ட் மோசடி தொடர்பாக ஏற்கெனவே பொருளாதார குற்றப்பிரிவு(Economic Offences Wing) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வழக்கு தொடர்பாகவே இன்று இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!