News July 3, 2024
கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு 4000 பயனாளிகள் தேர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று(ஜூலை 2) 412 கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்ய சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட முழுவதும் 4000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 3 தவணையாக ரூ 3.10 லட்சம் வழங்கப்படும். மேலும், பயனாளிகளுக்கு விரைவில் வீடு கட்ட ஆணை வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News July 10, 2025
பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி பெண்குழந்தைகளை கொண்ட குடும்பங்கள் வைப்பு நிதியாக ரூ.50,000 பெறலாம். இதில் பயன் பெற ஆண் குழந்தைகள் இருக்க கூடாது. தகுதியுடையோர் அருகில் உள்ள இ- சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
News July 10, 2025
உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுவதற்கான “உயர்கல்வி வழிகாட்டித் திட்டக் கட்டுப்பாட்டு அறை” மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், 30.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
News July 10, 2025
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்த கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், இன்று (ஜூலை 9) மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டச் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடந்த இக்கூட்டத்தில், விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டது.