News July 3, 2024
ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதார் சேவை

சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில், ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வரும் 7ஆம் தேதி முதல் ஆக.31ஆம் தேதி வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும் என கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். பள்ளி குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆதார் மையங்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 12, 2025
தென்காசி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

தென்காசி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. வரும் 19ஆம் தேதி சுரண்டை நகராட்சி ,புதூர் பேரூராட்சி, மந்தியூர் ஊராட்சி, புதுக்குடி ஊராட்சி , குருக்கள்பட்டி ஊராட்சி, சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெறும் எனவும் முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறும்படியும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News September 12, 2025
தென்காசி: வீடுதேடி குடிமைப் பொருள்கள் வழங்கல்

தென்காசி மாவட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடும்ப அட்டைதாரா்களுக்கு செப்.13, 14 ம் தேதிகளில் வீடுதேடி குடிமை பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என தென்காசி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் நரசிம்மன் அறிவித்துள்ளாா். இனிவரும் மாதங்களிலும் மாதத்தின் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டப் பயனாளிகளுக்கு இல்லங்களுக்கே நேரில் வந்து குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யபட உள்ளது.
News September 12, 2025
செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இன்று இங்கு மட்டும் இயக்கம்

செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் – கரூர் இடையே மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஈரோடு – கரூர் இடையே பொறியியல் பணிகள் காரணமாக இந்த ரயில் பகுதி தூரம் ரத்து செய்யபட்டுள்ளது. மேலும், கொடைக்கானல் ரோட்டில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை- திண்டுக்கல் இடையே (செவ்வாய் தவிர) ஏற்கனவே ரத்து செய்யபட்டுள்ளது.