News July 3, 2024
சுயநலமே தோல்விக்கு காரணம்: பார்தீவ் பட்டேல்

PAK அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது சுயநலத்தை முன்னிறுத்தியதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் படேல் குற்றஞ்சாட்டியுள்ளார். மிக திறமையான தொடக்க ஆட்டக்காரரான ஃபகார் ஜமானை முதலில் களமிறக்கி இருக்க வேண்டுமென விமர்சித்த அவர், ஆனால் பாபர் அசாம் அதனை செய்யவில்லை என்று கூறினார். மேலும், சர்வதேச அணிகளில் PAK அணி மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு அவரே காரணம் எனவும் சாடினார்.
Similar News
News September 21, 2025
பெட்ரூம் அமைதியா இருக்க.. இந்த 4 பொருள்களை நீக்குங்க!

வாஸ்து சாஸ்திரங்களின் படி, படுக்கையறையில், இந்த 4 பொருள்கள் இருக்கக்கூடாது *தெய்வப் படங்கள்: இது எதிர்மறையாக ஆற்றலை பெருக்கும் *விலங்குகளின் படங்கள்: தம்பதியரின் உறவில் மோதல்களை ஏற்படுத்தி, அமைதியை குலைக்கும் *காலணிகள்: தலைப்பகுதிக்கு அருகிலும், படுக்கைக்கு அடியிலும் காலணிகள் இருக்கக்கூடாது. இது எதிர்மறை சக்தியை அதிகரிக்கும் *துடைப்பம்: இது நிதி நிலையை மோசமாக்கி, துரதிஷ்டத்தை தரக்கூடியது.
News September 21, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கும் ₹5,000.. தமிழக அரசு தகவல்

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி குறைப்பை அமல்படுத்துவதாக சுதந்திர தின உரையில் மோடி அறிவித்தார். இந்நிலையில், நாடு முழுவதும் நாளை புதிய ஜிஎஸ்டி அமலுக்கு வருகிறது. இந்நிலையில், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பை தீபாவளியையொட்டி CM ஸ்டாலின் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News September 21, 2025
இந்தியா பவுலிங்.. பும்ரா, வருண் உள்ளே

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. ஓமனுக்கு எதிரான போட்டியில் ஓய்வில் இருந்த பும்ரா, வருண் சக்கரவர்த்தி அணிக்கு திரும்பியுள்ளனர். ஏற்கெனவே, லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. Head to Head = 14, வெற்றி = 11 இந்தியா, 3 பாகிஸ்தான்.