News July 3, 2024
மதுரை எம்.பி.க்கு அண்ணாமலை கேள்வி

செங்கோல் என்பது பெண்களை அடிமைப்படுத்துவது போன்றது’ என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அண்மையில் பேசியிருந்தார். இதுகுறித்து நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை, “மதுரை பெண் மேயருக்கு செங்கோல் வழங்கப்பட்ட நிகழ்வில், எம்.பி. வெங்கடேசன் அதை பிடித்தபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். பிரதமர் செங்கோல் வைத்தால் தவறு. இவர்கள் செய்தால் சரியா? இதுதான் இவர்களின் அரசியல். இது போலி முகத்திரை” என விமர்சித்தார்.
Similar News
News September 6, 2025
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா தொடக்கம்

மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் மற்றும் தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 232 நவீன அரங்குகளுடன் பத்து நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவை நேற்று அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார். மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
News September 6, 2025
மதுரையில் நாளை கோவில்களில் நடையடைப்பு

நாளை (செப்.,7) சந்திரகிரகணம் இரவு 9:57 மணிக்கு துவங்கி அதிகாலை 1:26 மணிக்கு முடிகிறது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களில் மத்திம காலதீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம கால சுவாமி புறப்பாடு நாளை காலை 11:41 மணிக்கு நடைபெறும். மதியம் 12:30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது. செப்.8 முதல் வழக்கம் போல் தரிசனம் நடைபெறும்.
News September 6, 2025
மதுரை: சந்திர கிரகணம் நிகழ்வை பார்க்கலாம்

சந்திர கிரகணம் நாளை இரவு 9:58 மணிக்கு துவங்கி நாளை மறுநாள் அதிகாலை 1 மணி அளவில் விலகுகிறது. சந்திரன் மறைப்பு 11 மணி அளவில் துவங்கி அதிகபட்சமாக 11:41 மணிக்கு முழுமையாகி 12:22 வரை நிலைத்து நிற்கும் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக விலகி அதிகாலை 1:26 மணிக்கு முழுமை அடையும். இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலே பார்த்து மகிழலாம் என மதுரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.