News July 2, 2024
நாங்களும் இந்துக்கள் தான்: தாக்கரே

தங்களுடைய இந்துத்துவா புனிதமானது என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். ராகுல் காந்தி நேற்று தவறாக எதுவும் பேசவில்லை என கூறிய அவர், பாஜக மட்டுமே இந்துக்களின் பிரதிநிதி அல்ல எனவும், பாஜகவை சாராதவர்கள் நாடாளுமன்றத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என கூறுவது குற்றமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்துத்துவத்தை அவமதிப்பதை பொறுத்து கொள்ள மாட்டோம் என சிவசேனா UBT தலைவர் எச்சரித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
உங்கள் போன், உங்களை ஒட்டுக் கேட்பது தெரியுமா?

நீங்கள் எதைப் பற்றியாவது பேசியபின், உங்கள் சோஷியல் மீடியா, இணைய தேடல்களில் அது தொடர்பான விளம்பரங்கள் வருவதை கவனித்திருக்கிறீர்களா? இதற்கு காரணம், நீங்கள் பேசுவதை போன் ஒட்டுக் கேட்பது தான் என்கின்றனர் டெக் நிபுணர்கள். உங்கள் பேச்சை கேட்கும் ஆப்கள், அதிலுள்ள Keywords-ஐ உள்வாங்கி, அதற்கேற்ப விளம்பரங்களை வழங்குகிறதாம். இதை தவிர்க்க, போனில் உள்ள ஆப்களில் மைக் பர்மிஷனை Turn off செய்ய வேண்டும்.
News November 18, 2025
விஜய் + அதிமுக கூட்டணி… முடிவை தெரிவித்தார்

அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறுமா என அண்மைக்காலமாக யூகங்கள் எழுந்து வருகின்றன. பாஜக இருக்கும் கூட்டணியில் தாங்கள் இடம்பெறமாட்டோம் என தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், தவெக விரும்பினால் அவர்களுடன் கூட்டணி குறித்து EPS பேசுவார் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறுமா?
News November 18, 2025
தமிழ்நாட்டில் இவ்வளவு தங்கம் இருக்கா?

தங்கத்தை தமிழர்கள் ஒரு முதலீடாகவோ அல்லது அந்தஸ்தின் அடையாளமாக மட்டும் பார்க்கவில்லை. மாறாக, ஆபத்தில் உதவும் சேமிப்பாக கருதுகிறார்கள். அதனால் தான் சிறுக சிறுகவாவது தங்கத்தை வாங்கிட விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் உள்ள மொத்த தங்கம் எவ்வளவு தெரியுமா? 6,720 டன் தங்கம்! இது அமெரிக்க அரசின் தங்க இருப்புக்கு சமமானதாகும். ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா ஆகிய நாடுகளின் தங்க இருப்பைவிட அதிகமாம்.


