News July 2, 2024

15 நிமிடங்களில் ₹1 லட்சம் கடன்

image

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், 15 நிமிடங்களில் கடன் பெறும் வகையில், MSME என்ற புதிய திட்டத்தை SBI அறிமுகம் செய்துள்ளது. GST விற்பனை ரசீதுகளை ஆதாரமாகக் கொண்டு, இந்தத் திட்டத்தில் ₹1 லட்சம் வரை உடனடி கடன் வழங்கப்படுகிறது. GST பதிவு செய்த நிறுவனங்களின் மூலதன தேவைகளை தொடர்வதற்கான குறுகிய கால கடன்களை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். மேலும் விவரங்களுக்கு SBI வங்கியின் இணையதள முகவரியில் அறியலாம்

Similar News

News November 18, 2025

அட்ஜஸ்ட்மெண்ட் குற்றச்சாட்டை மறுத்த தனுஷ் தரப்பு

image

தனுஷுடன் நடிக்க அட்ஜஸ்ட்மெண்ட் செய்யுமாறு அழுத்தம் தரப்பட்டதாக <<18320110>>நடிகை மான்யா<<>> வைத்த குற்றச்சாட்டை Wunderbar பிலிம்ஸ் மறுத்துள்ளது. இந்த விஷயத்தில் தங்களது பெயரை யாரோ தவறாக பயன்படுத்துவதாக Wunderbar பிலிம்ஸ் மற்றும் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ் விளக்கமளித்துள்ளார். அந்நிறுவனத்தின் பெயரில் வரும் Casting Call அழைப்புகள் போலியானது என்றும், 7598756841 மொபைல் எண் தன்னுடையது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

News November 18, 2025

உங்கள் போன், உங்களை ஒட்டுக் கேட்பது தெரியுமா?

image

நீங்கள் எதைப் பற்றியாவது பேசியபின், உங்கள் சோஷியல் மீடியா, இணைய தேடல்களில் அது தொடர்பான விளம்பரங்கள் வருவதை கவனித்திருக்கிறீர்களா? இதற்கு காரணம், நீங்கள் பேசுவதை போன் ஒட்டுக் கேட்பது தான் என்கின்றனர் டெக் நிபுணர்கள். உங்கள் பேச்சை கேட்கும் ஆப்கள், அதிலுள்ள Keywords-ஐ உள்வாங்கி, அதற்கேற்ப விளம்பரங்களை வழங்குகிறதாம். இதை தவிர்க்க, போனில் உள்ள ஆப்களில் மைக் பர்மிஷனை Turn off செய்ய வேண்டும்.

News November 18, 2025

விஜய் + அதிமுக கூட்டணி… முடிவை தெரிவித்தார்

image

அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறுமா என அண்மைக்காலமாக யூகங்கள் எழுந்து வருகின்றன. பாஜக இருக்கும் கூட்டணியில் தாங்கள் இடம்பெறமாட்டோம் என தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், தவெக விரும்பினால் அவர்களுடன் கூட்டணி குறித்து EPS பேசுவார் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறுமா?

error: Content is protected !!