News July 2, 2024

முதல்வர் சிறைக்குச் செல்வார்: செல்லூர் ராஜூ

image

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எப்படி கெஜ்ரிவால் சிறையில் உள்ளாரோ, அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுபான கொள்முதல் ஊழலில் சிறைக்குச் செல்வார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கொள்முதல் ஊழல் தொடர்பாக முதல்வர் உட்பட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News September 6, 2025

மதுரையில் நாளை கோவில்களில் நடையடைப்பு

image

நாளை (செப்.,7) சந்திரகிரகணம் இரவு 9:57 மணிக்கு துவங்கி அதிகாலை 1:26 மணிக்கு முடிகிறது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களில் மத்திம காலதீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம கால சுவாமி புறப்பாடு நாளை காலை 11:41 மணிக்கு நடைபெறும். மதியம் 12:30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது. செப்.8 முதல் வழக்கம் போல் தரிசனம் நடைபெறும்.

News September 6, 2025

மதுரை: சந்திர கிரகணம் நிகழ்வை பார்க்கலாம்

image

சந்திர கிரகணம் நாளை இரவு 9:58 மணிக்கு துவங்கி நாளை மறுநாள் அதிகாலை 1 மணி அளவில் விலகுகிறது. சந்திரன் மறைப்பு 11 மணி அளவில் துவங்கி அதிகபட்சமாக 11:41 மணிக்கு முழுமையாகி 12:22 வரை நிலைத்து நிற்கும் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக விலகி அதிகாலை 1:26 மணிக்கு முழுமை அடையும். இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலே பார்த்து மகிழலாம் என மதுரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

News September 6, 2025

மதுரையில் வக்கீலை தாக்கிய 3 பேர் கைது

image

வண்டியூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் பகலவன்(40). இவர் நேற்று முன்தினம் காலை நடைபெற்று சென்ற போது சங்கு நகரில் திருமண மண்டபம் எதிரில் 3 பேர் கொண்ட கும்பல் கம்பு, கற்களால் அவரை கடுமையாக தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து அவரது மனைவியை ஷியாமளா அளித்த புகாரில் ராம்குமார் (28), அருண்பாண்டி(33), மணிமாறன்(37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!