News July 2, 2024
ரயில்வே அட்டவணையில் மாற்றமில்லை

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் ரயில்களின் அட்டவணை மாற்றப்படும். அதில், புதிய ரயில்கள் தொடர்பான அறிவிப்புகள் கூட வெளியாகும். ஆனால், இந்த ஆண்டுக்கான அட்டவணை மாற்றம் 2025, ஜனவரி 1ஆம் தேதி வெளியாகும் என்று சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக புதிய அட்டவணை தயாரிக்கும் பணி தாமதமாவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 25, 2025
மயிலாடுதுறை அருகே பெண் கைது

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் மணல்மேடு காவல் சரகத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணல்மேடு அருகே கொற்கை சாலை தெரு பகுதியில் விஜயகுமார் என்பவரது மனைவி சங்கீதா (39) விற்பனைக்காக 200 பாண்டி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்து, அவற்றை பறிமுதல் செய்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர்.

வரலாற்று படுகொலையின் சாட்சி மௌனமானது!

வரலாற்றின் கருப்பு பக்கமாக கருதப்படும் நிகழ்வுகளில் ஒன்றான துல்சா இனப்படுகொலையில் இருந்து தப்பித்தவரான வயோலா பிளெட்சர் காலமானார். 1921-ல் அமெரிக்காவின் துல்சா நகரில் கருப்பின மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். நகரமே அழிக்கப்பட்ட நிலையில், சுமார் 6,000 பேர் பாதிக்கப்பட்டு, 300 பேர் பலியாகினர். அப்போது 7 வயதாக இருந்த வயோலா பிளெட்சர், தற்போது 111 வயதில், வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார்.