News July 2, 2024

விக்கிரவாண்டி: பாமகவிற்கு ஆதரவு அளிக்குமா அதிமுக?

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் பல்வேறு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி, பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று மக்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுக மற்றும் தேமுதிகவினர் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என நேரிடையாகவே கோரிக்கை வைத்தார்.

Similar News

News July 8, 2025

விழுப்புரம் புதுச்சேரி ரயில் சேவை ரத்து

image

விழுப்புரத்தில் இருந்து காலை 5:25 மணிக்கும், புதுச்சேரியில் இருந்து காலை 8:05 மணிக்கும் புறப்படும் விழுப்புரம்- புதுச்சேரி பாசஞ்சர் ரயில்கள் (எண் 66063 மற்றும் 66064) திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக வரும் ஜூலை 10ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரையில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

News July 8, 2025

விழுப்புரம்-சென்னை கடற்கரை ரயில் பகுதியாக ரத்து

image

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக, விழுப்புரத்தில் இருந்து பகல் 2:40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் (எண் 66046) வரும் ஜூலை 12 மற்றும் ஜூலை 15ம் தேதிகளில் முண்டியம்பாக்கத்தில் இருந்து பகல் 2:55 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

News July 8, 2025

தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

image

தாம்பரத்தில் இருந்து காலை 9:45 மணிக்கு விழுப்புரத்திற்கு புறப்படும் தாம்பரம் ~விழுப்புரம் பாசஞ்சர் ரயில் (எண் 66045) வரும் ஜூலை12 மற்றும் ஜூலை15ம் தேதிகளில் திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!