News July 2, 2024
ராகுலுக்கு எதிராக ட்ரெண்ட் ஆகும் Shame

மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீது பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி, பாஜகவை கடுமையாக விமர்சித்தார். தனது கையில் சிவன் புகைப்படத்தை ஏந்தி அவர் பேசினார். இதையடுத்து ராகுலை விமர்சித்து, எக்ஸ் தளத்தில் Shame என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. சிவன் படத்தைப் போல பிற மத கடவுள் படத்தை ராகுல் எடுத்து வந்து காட்டுவாரா என விமர்சிக்கப்படுகிறது.
Similar News
News September 21, 2025
கிருஷ்ணகிரி: ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

குருபரப்பள்ளி அருகே உள்ள ஜிங்கலூரைச் சோ்ந்தவா் மசாகா். இவரது மகன் உபேஸ் (8). இவர் கொரல்நத்தம் உருதுப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் நேற்று முன்தினம் கொரல்நத்தம் ஏரிக் கரையோரமாக நடந்து சென்ற மாணவா் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிந்தார். அங்கிருந்தவா்கள் ஏரியில் குதித்து சிறுவனின் உடலை மீட்டனா். குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News September 21, 2025
நவராத்திரியில் தங்கம் வாங்குவதால்..

எவ்வளவு விலை கூடினாலும், தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதே நேரத்தில், தங்கத்தை வாங்குவதற்கு என சில விசேஷ தினங்கள் உள்ளன. அம்மனுக்கு உகந்த நவராத்திரியில் தங்கத்தை வாங்குவதோ, முதலீடு செய்வதோ வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்குமாம். 10-வது நாளான விஜயதசமியில் வாங்குவது கூடுதல் நன்மை கொடுக்கும் எனப்படுகிறது. நாளை நவராத்திரி தொடங்குகிறது. இத்தகவலை நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 21, 2025
இன்று இரவு கணவன் மனைவி சேரக் கூடாதாம்

சூரிய கிரகணம் இன்று இரவு 10.59 முதல் நாளை அதிகாலை 3.23 வரை நிகழவுள்ளது. கிரகணம் நிகழும் பொழுது, கணவன்- மனைவி இணைய கூடாது என்று சொல்லப்படுகிறது. அதேபோல், மற்றவர்களை விடவும் கர்ப்பிணிப் பெண்கள் கிரகண காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வெளிவரும் அதிகப்படியான கதிர்வீச்சு வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமாம்.